Posts

பொங்கல் வைப்போம்

Image
பூங்கரும்பு கட்டிவைத்து புதுப்பானை நடுவில் வைத்து கும்மியிட்டு குலவையிட்டு குதூகலமாய்ப் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா நல்ல தமிழ் மக்களுக்கு நாளும் நன்மை நடக்க வேண்டி தைமாதத் திருநாளில் தரணியெங்கும் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா கைகொடுத்து காப்பாற்றும் கடவுள் எங்கள் கதிரவனாம் கரங்குவித்து நன்றி சொல்ல கட்டாயமாய்ப் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா ஏர் பூணும் காளைகளை எண்ணத்திலே நிறுத்தி வைத்து எல்லாருமே சேர்ந்து இங்கே இனிமையான பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா கன்னியர்தம் கைமணமும் கலையோடு காணவேண்டி காணும் பொங்கல் என்று சொல்லி கலகலன்னு பொங்கல் வைப்போம் (பூங்கரும்பு )

செருக்கு

Image
என்ன நீவருந் திக்கவி படிப்பினும் எடுத்தகற் பனைமுன்னோர் சொன்ன தேயலால் நூதன மொன்றிலை; தொன்மைநூல் பலவாகும்! முன்னந் நூலெலாந் தந்தவன் நீழலை முற்றுணர்ந் தனையில்லை உன்னின் மிக்கவர் பலருளர் கல்வியில் உள்ளமே! செருக்கன்றே! ---நீதிநூல்- அகரம் அமுதனதுபக்கம் போய்வந்தேன் ஒருவலம் அங்கே கண்டதிலே அதிர்ந்து அடங்கியது என்மனம் அடடா புதிது என்படைப்பு அதிலே எத்துணைப் புல்லரிப்பு அத்துணைச்செருக்கும் ஒடுங்கியது; ஒருமொழியதனை உணர்த்தியது எதுதான் புதிது இப்பூமிதனில் என்றே அறிவு புகட்டியது சொல்லாதெதுவும் சொல்லவில்லை - நாம் சொல்வதில் எதுவும் புதிதுமில்லை இல்லாதெதையும் எழுதவில்லை - ஏதும் இல்லை என்பதும் அறிவுமில்லை முன்னறிவின்றி முதிர்ச்சி இல்லை - இதை முன்னம் சொன்னவன் மூடன் இல்லை இப்படிச் சொல்லி என்னையுந்தான் கிள்ளிக் கலைத்தது கனவையுந்தான் இனியொரு செருக்கு எனக்குவந்தால் இன்னுயிர் சுருக்கு என் இறைவா!

உறுத்தல் 2

தமிழ் பெயர்களும் ஆங்கில எழுத்துகளும்... குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்டுவது இயல்பான நிகழ்ச்சியே. பிறப்புப் பத்திரம் எடுக்க அப்பெயரை ஆங்கில எழுத்தில் எழுதுவதும் வழக்கமானது கூட. இதில் எனக்குப் புரிபடாத செய்தி ஒன்று உள்ளது. அது, தமிழ்ப் பெயரை ஆங்கில எழுத்தில் எழுதும் போது அப்பெயரை ஆங்கில உச்சரிப்பில் படிப்பதா இல்லை மலாய் உச்சரிப்பில் படிப்பதா என்பதுதான். பெரும்பாலான பெயர்களை மருத்துவமனைகளில் உள்ள மலாய் தாதியர்கள் தவறாக அழைப்பதும்; அது விளங்காமல் நாம் தலை சொறிந்து நிற்பதும் கண்கூடு. இந்த சிக்கலின் பின்னணி என்ன? 50களில் பதிவகங்களில் நாம் நம் பெயரைச் சொல்ல, அதை அங்கிருக்கும் சீனரோ மலாய்க்காரரோதான் பதிவு செய்வர். அப்போது நிறைய பிழைகள் வந்தது இயல்பே. ஆனால் இப்போது? நம்மில் பெரும்பாலோருக்கு மலாய் எழுதப் படிக்கத் தெரியும். நம் அக்கம்பக்கத்து தமிழ்குடும்பங்களிலும் படித்தவர்கள் இருப்பார்கள். நாம் தான் நம் பெயர்ப்பாரங்களைப் பூர்த்தி செய்கிறோம் இருந்தும் அமுதன் என்ற பெயர் AMMUTTHAN என்று எழுதப்படுவது எதனால்? 2M 2T எதற்கு அப்பெயரில் ? அப்படி எழுதப்படும் பெயர்கள் மருத்துவமனையிலோ பள்ளியிலோ

உறுத்தல்

தமிழ் என் மொழி ; தமிழே என் வழி என்று தவறியும் சொல்லி விட்டால் போதும். சொன்னவன் தமிழ் வெறியன் என்று முத்திரை குத்தப்படுவான். அதிலும் தமிழில் சமற்கிருதம் கலக்காதே என்று குரல் எழுப்பி விட்டாலோ அவனுக்கு நாத்திகன் எனும் பட்டம். ஏன் இந்த நிலைமை? தமிழுக்கும் கடவுளுக்கும் பகையா? இல்லை தமிழைக் கடவுள் மறுக்கிறாரா? உண்மை நிலை என்ன..? யார் தமிழன் என்பதைக் கூட உணர மறுக்கும் இந்தச் சமுதாயத்திற்கு இவற்றை எடுத்துரைப்பதில் இருக்கும் நியதி எனக்குப் புலப்படவில்லை. ஊட்டி ஊட்டி வளர்த்து விடுவதால் என்ன பயன் இருக்கப் போகிறது..? சமற்கிருதம் தான் தாய்மொழிக்குத் தாய்மொழி; அது கடவுள் பேசும் மொழி; அதனால் செய்யப்படும் பூசைகள்தான் சிறப்பாகும் என்பதை இன்னும் எத்தனைக்காலம்தான் நம்பி வாழப் போகிறோம்? இன்னமொழிதான் கடவுளுக்குப் புரியும் என்றால் பிறவி ஊமைகளுக்குக் கடவுள் அருள் தர மாட்டாரா? அவர்கள் இறந்து போய் விடலாமா? மிருகங்களும் சமற்கிருதம் பேச வேண்டுமா? இப்படி எல்லாம் கேட்பதால் நான் கெட்டவனா? சமற்கிருதம் நல்ல மொழியா இல்லையா என்பதில்லை என் வாதம். கடவுளுக்கு ஒரு மொழிதான் தெரியும்;புரியும் என

வலியின் வலி...!

இனிய தமிழினமே, உனக்குள் உணர்வென்ற ஒன்று இருக்கும் என்றால்.... உயிர் ஒன்று உனக்குள் உள்ளது என்றால்... ஒரு முறை அந்த ஈழத்தைப் பார்... உணர்வுகலந்த கண்களால்....! உன் உற்ற உறவு உயிர் வேண்டி அழுகிறது... உறவுதான் அது... மடத்தனமான மதத்தால் அல்ல உனக்குத் தாய்மொழி தமிழென்றால்... உன் உறவுதான் அது... அவன் தவிப்பு உனக்கும் வரும்... மலேசியனே....! உனக்கும் வரும்... தலைகொடு... தடுக்க எழு...! இதையும் ... இனி வரும் அதையும்...! இல்லையெனில்... ஆணாய் இருந்தால் அறுத்தெறி உறுப்பை... பெண்ணெனில்..... பிறப்பை மறுத்திடு.. தமிழ் உயிரை நாய்களுக்குத் தராதே...!

எஃது அருமை?

மத்தளமா மனிதனில் தமிழன்? இருபுறமும் அடிவாங்கி எப்போதும் கிடக்கிறான்! இருக்கணுமா இனியும் தமிழன்? பொறுத்தே பொங்கியெழ நேரம் பார்க்கிறான்! சுருங்கிய நிலைமைக்குச் சுட்டலாமோ விரலை மங்கிய வாழ்க்கைக்கு மடத்தனந்தான்;மறந்தான் அறுத்தெரிய வேண்டாமோ எச்சில்உமிழ் வாயை கருத்துக்களின் வாதங்கள் வெறும் கழுத்தறுப்பே.. அவன்வருவான் இவன்வருவான் அதுவெல்லாம்பொய் அடிவேரை அறுத்தெரிவாய் அலறிடுவான்,மெய்... உன்வீரம் அத்தனையும் உலகத்திடம் காட்டு உற்றபெருமை ஓடிவரும் தன்னைத்தானே மீட்டு சொல்லிவிட்டு வருவதா சுனாமிக்குப் பெருமை- உன் சொந்தம் தவிக்கும்போதெல்லாம் சுழற்றியடி, அஃது அருமை!

உனக்கது பிடிக்குதா சொல்...?

Image
என்று பிறப்பாய் என்றிருந்தேன் இன்று நீ பிறந்தாய்.. என்ன பெயர் அப்பா எனக்கு என்பதாய் வாய் திறந்தாய்... எந்தமிழ் எழுத்தெல்லாம் என்னில் தொடங்கு எனக் கேட்க பண்ணிருந்தும் பாட்டெழுதாப் பாவலன் நிலை எனக்கு... இனிய பெயர் தேடி இரவெல்லாம் தவித்தேன் நான் பகல் முழுதும் உனைப் பார்த்தே பார்வை தொலைத்ததனால்... விழியழகைச் சொல்லிவிட ஒருபெயரும் விரலழகைச் சொல்லிவிட ஒரு பெயரும் முக அழகைச் சொல்லிவிட ஒரு பெயரும்- உன் முழு அழகைச் சொல்லிவிட ஒரு பெயரும் உருமாறி ஒலிமாறி ஒன்றன்பின் ஒன்றாய் உனக்காகக் கால்வலித்துக் காத்திருக்க ஒற்றைப் பெயர் கண்டேனே கண்மணியே உனக்கது பிடிக்குதா சொல்...?