பொங்கல் வைப்போம்
பூங்கரும்பு கட்டிவைத்து
புதுப்பானை நடுவில் வைத்து
கும்மியிட்டு குலவையிட்டு
குதூகலமாய்ப் பொங்கல் வைப்போம்
தான னன்னே (3x) தானன்னா
நல்ல தமிழ் மக்களுக்கு
நாளும் நன்மை நடக்க வேண்டி
தைமாதத் திருநாளில்
தரணியெங்கும் பொங்கல் வைப்போம்
தான னன்னே (3x) தானன்னா
கைகொடுத்து காப்பாற்றும்
கடவுள் எங்கள் கதிரவனாம்
கரங்குவித்து நன்றி சொல்ல
கட்டாயமாய்ப் பொங்கல் வைப்போம்
தான னன்னே (3x) தானன்னா
ஏர் பூணும் காளைகளை
எண்ணத்திலே நிறுத்தி வைத்து
எல்லாருமே சேர்ந்து இங்கே
இனிமையான பொங்கல் வைப்போம்
தான னன்னே (3x) தானன்னா
கன்னியர்தம் கைமணமும்
கலையோடு காணவேண்டி
காணும் பொங்கல் என்று சொல்லி
கலகலன்னு பொங்கல் வைப்போம் (பூங்கரும்பு )
Comments
அடிக்கடி பதிவிட்டால் நன்றாக இருக்குமே!
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News