செருக்கு


என்ன நீவருந் திக்கவி படிப்பினும்
எடுத்தகற் பனைமுன்னோர்
சொன்ன தேயலால் நூதன மொன்றிலை;
தொன்மைநூல் பலவாகும்!
முன்னந் நூலெலாந் தந்தவன் நீழலை
முற்றுணர்ந் தனையில்லை
உன்னின் மிக்கவர் பலருளர் கல்வியில்
உள்ளமே! செருக்கன்றே! ---நீதிநூல்-

அகரம் அமுதனதுபக்கம் போய்வந்தேன் ஒருவலம்
அங்கே கண்டதிலே அதிர்ந்து அடங்கியது என்மனம்
அடடா புதிது என்படைப்பு அதிலே எத்துணைப் புல்லரிப்பு
அத்துணைச்செருக்கும் ஒடுங்கியது; ஒருமொழியதனை உணர்த்தியது
எதுதான் புதிது இப்பூமிதனில் என்றே அறிவு புகட்டியது

சொல்லாதெதுவும் சொல்லவில்லை - நாம்
சொல்வதில் எதுவும் புதிதுமில்லை
இல்லாதெதையும் எழுதவில்லை - ஏதும்
இல்லை என்பதும் அறிவுமில்லை
முன்னறிவின்றி முதிர்ச்சி இல்லை - இதை
முன்னம் சொன்னவன் மூடன் இல்லை

இப்படிச் சொல்லி என்னையுந்தான்
கிள்ளிக் கலைத்தது கனவையுந்தான்
இனியொரு செருக்கு எனக்குவந்தால்
இன்னுயிர் சுருக்கு என் இறைவா!

Comments

விக்கினேசு,

அருமை படைப்பையா!!

புதுமை செய்கிறோம்; நவினம் படைக்கிறோம் என்று செருக்குடையோர்க்கு நல்ல சாட்டையடி இந்தப் பதிவு!

நற்பணி தொடர்க!
நல்லிடுகை தருக!
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஐயா.
//சொல்லாதெதுவும் சொல்லவில்லை - நாம்
சொல்வதில் எதுவும் புதிதுமில்லை//

உண்மை ஐயா! நல்ல படைப்பு! புத்திலக்கியவாணர்களின் செருக்கிற்கு நல்ல அடி!
தமிழரண் அவர்களே,
கருத்துக்கு நன்றி. மீண்டும் வருக.
Unknown said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

பொங்கல் வைப்போம்

உனக்கது பிடிக்குதா சொல்...?