உறுத்தல்

தமிழ் என் மொழி ; தமிழே என் வழி என்று தவறியும் சொல்லி விட்டால் போதும். சொன்னவன் தமிழ் வெறியன் என்று முத்திரை குத்தப்படுவான். அதிலும் தமிழில் சமற்கிருதம் கலக்காதே என்று குரல் எழுப்பி விட்டாலோ அவனுக்கு நாத்திகன் எனும் பட்டம்.

ஏன் இந்த நிலைமை?

தமிழுக்கும் கடவுளுக்கும் பகையா? இல்லை தமிழைக் கடவுள் மறுக்கிறாரா? உண்மை நிலை என்ன..?

யார் தமிழன் என்பதைக் கூட உணர மறுக்கும் இந்தச் சமுதாயத்திற்கு இவற்றை எடுத்துரைப்பதில் இருக்கும் நியதி எனக்குப் புலப்படவில்லை. ஊட்டி ஊட்டி வளர்த்து விடுவதால் என்ன பயன் இருக்கப் போகிறது..?

சமற்கிருதம் தான் தாய்மொழிக்குத் தாய்மொழி; அது கடவுள் பேசும் மொழி; அதனால் செய்யப்படும் பூசைகள்தான் சிறப்பாகும் என்பதை இன்னும் எத்தனைக்காலம்தான் நம்பி வாழப் போகிறோம்?

இன்னமொழிதான் கடவுளுக்குப் புரியும் என்றால் பிறவி ஊமைகளுக்குக் கடவுள் அருள் தர மாட்டாரா? அவர்கள் இறந்து போய் விடலாமா? மிருகங்களும் சமற்கிருதம் பேச வேண்டுமா? இப்படி எல்லாம் கேட்பதால் நான் கெட்டவனா?

சமற்கிருதம் நல்ல மொழியா இல்லையா என்பதில்லை என் வாதம். கடவுளுக்கு ஒரு மொழிதான் தெரியும்;புரியும் என்பதைத்தான் என் அறிவு ஏற்க மறுக்கிறது. கடவுள் எல்லாம் வல்லவன் என்பதன் பொருள் அனைத்தும் அறிந்தவன் அல்லவா? அவனுக்கு இதுதான் புரியும்; அது தெரியாது என்பது கடவுளையே சிறுமைபடுத்துவது ஆகாதா?

எனக்கு உறுத்துகிறது,

உங்களுக்கு....?

Comments

மனோகரன் கிருஷ்ணன் said…
நல்லதை சொன்னிர்கள் அய்யா.தமிழன் யார் என்பதை தமிழனே இன்னும் உணராமல் இருக்கிறோம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோகரன் அவர்களே.
Tamilvanan said…
நாம் தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்கின்ற நாள்தான் நம்மி்னம் அனைத்து துறைகளிலும் முன்னெக்கின்ற நாளாக இருக்கும். என்னளவில் கோவிலில் தமி்ழ் வேண்டும் எனப் போராடுவதை விட கோவிலே வேண்டாம் என்பது நல்லது. இருக்கின்ற வளங்களை தமி்ழ்ப்பள்ளிகளுக்கு செலவிடலாம்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாணன் அவர்களே.
Anonymous said…
கடவுள் என்று தனியே ஏன் பார்க்கிறாய் மனிதனே...பிரிவினைக்காக‌வா..

அந்த‌ இய‌ற்க்கைகு பெய‌ர் ம‌னித‌ன் சுட்டிய‌ பெய‌ர் க‌ட‌வுள்..'


அவ‌ரை ஏன் நாம் வம்புக்கு இளூக்க‌ வேண்டும்...

உன்னை ந‌ம்பு பின் க‌ட‌வுளை ந‌ம்ப‌ளாம்...ஏன் என்றால்... ச‌க‌ல‌மும் ந‌ம்முள் அட‌க்க‌ம்...அவ‌னை உன்னில் பார்.நாமும் இந்த‌ இய‌ற்க்கையின் ப‌டைப்பே இய‌ற்க்கையே க‌ட‌வுள் என்றால் எல்லாமே அவ‌ன்தான்.

மொளனமே இறை மொழி மானிடா

Popular posts from this blog

பொங்கல் வைப்போம்

உனக்கது பிடிக்குதா சொல்...?