Posts

எஃது அருமை?

மத்தளமா மனிதனில் தமிழன்? இருபுறமும் அடிவாங்கி எப்போதும் கிடக்கிறான்! இருக்கணுமா இனியும் தமிழன்? பொறுத்தே பொங்கியெழ நேரம் பார்க்கிறான்! சுருங்கிய நிலைமைக்குச் சுட்டலாமோ விரலை மங்கிய வாழ்க்கைக்கு மடத்தனந்தான்;மறந்தான் அறுத்தெரிய வேண்டாமோ எச்சில்உமிழ் வாயை கருத்துக்களின் வாதங்கள் வெறும் கழுத்தறுப்பே.. அவன்வருவான் இவன்வருவான் அதுவெல்லாம்பொய் அடிவேரை அறுத்தெரிவாய் அலறிடுவான்,மெய்... உன்வீரம் அத்தனையும் உலகத்திடம் காட்டு உற்றபெருமை ஓடிவரும் தன்னைத்தானே மீட்டு சொல்லிவிட்டு வருவதா சுனாமிக்குப் பெருமை- உன் சொந்தம் தவிக்கும்போதெல்லாம் சுழற்றியடி, அஃது அருமை!

உனக்கது பிடிக்குதா சொல்...?

Image
என்று பிறப்பாய் என்றிருந்தேன் இன்று நீ பிறந்தாய்.. என்ன பெயர் அப்பா எனக்கு என்பதாய் வாய் திறந்தாய்... எந்தமிழ் எழுத்தெல்லாம் என்னில் தொடங்கு எனக் கேட்க பண்ணிருந்தும் பாட்டெழுதாப் பாவலன் நிலை எனக்கு... இனிய பெயர் தேடி இரவெல்லாம் தவித்தேன் நான் பகல் முழுதும் உனைப் பார்த்தே பார்வை தொலைத்ததனால்... விழியழகைச் சொல்லிவிட ஒருபெயரும் விரலழகைச் சொல்லிவிட ஒரு பெயரும் முக அழகைச் சொல்லிவிட ஒரு பெயரும்- உன் முழு அழகைச் சொல்லிவிட ஒரு பெயரும் உருமாறி ஒலிமாறி ஒன்றன்பின் ஒன்றாய் உனக்காகக் கால்வலித்துக் காத்திருக்க ஒற்றைப் பெயர் கண்டேனே கண்மணியே உனக்கது பிடிக்குதா சொல்...?

சிதைந்த மனம்

எழுதிய கவிதையில் பிழைகள் வந்தால் இருமுறை படித்துத் திருத்தலாம்... இருக்கும் வாழ்வில் தவறுகள் வந்தால் எதனைக் கொண்டு திருத்த நான்..? முள்ளாய்ப் பாதை கிடக்கும்போது முகையென நினைக்க உருத்துதே இல்லாப் பொருளின் இலக்கியம்கூட இந்த வாழ்க்கையில் கசக்குதே... பயணம் இதுவெனத் தெரியா ஒருவன் பாதை கண்டிட வழியுண்டோ காணும் பாதையில் காலடி தொடர்ந்தால் காணாப் பயணம் கரையுண்டோ... வகையே தெரியா கேள்விகளால்- நான் வதங்கி வதங்கி வாடுகிறேன்... பகையே தெரியா உறவுகளால் - நான் பாசம் வேண்டி புலம்புகிறேன்...

பயணம்

Image
தத்தளிக்கும் என்று தெரிந்தே தனியே பயணிக்கிறது தன் சுமைகளோடு...!

நிலை ஏது

Image
வ ரவும் செலவும் உறவுகளில் உண்டு வருவது வரவு பிரிவது செலவு வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்தால் வருத்தம் இங்கே இயல்பு... உறுதி சொல்லும் உறவுகள் உடனேவருமென உத்தரவாதம் கிடையாது.. உடைந்திடும் உறவுகள் இதுதானென்று உணர்ந்திடும் வல்லமை கிடையாது... உண்மை உறவினை உறுத்தலாய்ப் பார்க்கும் ஊரார் மனமோ பொருக்காது உடனே தடைசெய வழியினைத்தேடி உறங்கிட உறங்கிட நினைக்காது... தன்னிலும் தவறுகள் இருக்கிறதென்று தலைதட்டிச் சொல்லியும் கேட்காது எண்ணிலாத் தவறுகள் இருப்பதாய்ச் சொல்லி இறுமாப்புச் செயல்பாட்டை நிறுத்தாது இனிய உறவுகள் இருந்திட நமக்கு எண்ணிக்கைக் கவலை இருக்காது இருக்கும் உறவை பிரிக்கும் உலகம் இருந்திடும் வரையில் நிலை ஏது ...?

தூரமாய்த் தொலைவாய்...!

Image
துறந்த உறவுகள் தொலைந்து போகட்டும் தொலைந்த உறவுகள் தூரம் போகட்டும் தூரம் போனதும் தூர்ந்து போகட்டும் தூர்ந்து போகுமுன் என் துயரம் போகட்டும்...! நினைக்கவில்லை நான்... நினைவில் நிற்பதேன்..? மறக்க வேண்டும் நான்... மறதி தொலைந்ததே..! வருந்தி அழுவதில் வரவு இல்லைதான் வருடம் கடந்துமென் வாழ்வு தொல்லைதான் தூரமாய்த் தொலைவாய் தொலைவாய் உறவே...!

அழகே..!

Image
இமைகள் கொன்றாய் இதயம் பெற்றாய் எந்தன் உயிரை எழுதிக் கேட்டாய் இருந்த அனைத்தும் எடுத்தாய் அழகே என்ன கொடுப்பாய் எனக்கு

தோராயமாக ...!

நல்லவை நிலைத்திருக்க ... அல்லவை நினைவழிக்க ... ஏற்றவழி என் இறைவா ஏன் இன்னும் சொல்லவில்லை ? என் நடையின் தவறோ...? எடுத்தவழி பிழையோ அடுத்துவந்து துரத்துதய்யா - நான் வெறுத்துவந்த நினைவு வலி எவன் கேட்டும் சொல்லாத நீ இவன் கேட்டா சொல்லி விடுவாய்... ? இருந்தபோதும் இதய ஓரம் எழுகிறதே நப்பாசை... ! துல்லியமாய் வேண்டாம் தோராயமாக வேனும்...!

சிதைந்த சிற்பம்

Image
ஒரு வாக்கியம் எழுது உடைத்து உடைத்துப் போடு இடையிடையே இஷ்டப்படி இட்டுவிடு நிறுத்தக்குறி உரைவீச்சாய் உன் கவிதை...!

ஏன் ...?

பூங்கொத்து எடுத்து வந்தேன் தோழி- நீயதைப் புறங்கையால் தட்டி விட்டாய்... - உன் புதிர்மொழி புரியவில்லையடி தோழி - நீயென் பூமனத்தைச் சுட்டுவிட்டாய் ஊரார் கண்பட்டு உள்ளில் புண்பட்டதே தோழி- நீ உணர்ந்தும் உணராமல் இருந்துவிட்டாய் - உன் உள்ளத்தின் ஓரிடத்தில் வாழ்ந்த்திருந்தேன் தோழி- நீயதை ஒரு நொடியில் மறுத்துவிட்டாய்... இல்லையில்லை மறைத்துவிட்டாய்...ஏன்...?