பூங்கரும்பு கட்டிவைத்து புதுப்பானை நடுவில் வைத்து கும்மியிட்டு குலவையிட்டு குதூகலமாய்ப் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா நல்ல தமிழ் மக்களுக்கு நாளும் நன்மை நடக்க வேண்டி தைமாதத் திருநாளில் தரணியெங்கும் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா கைகொடுத்து காப்பாற்றும் கடவுள் எங்கள் கதிரவனாம் கரங்குவித்து நன்றி சொல்ல கட்டாயமாய்ப் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா ஏர் பூணும் காளைகளை எண்ணத்திலே நிறுத்தி வைத்து எல்லாருமே சேர்ந்து இங்கே இனிமையான பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா கன்னியர்தம் கைமணமும் கலையோடு காணவேண்டி காணும் பொங்கல் என்று சொல்லி கலகலன்னு பொங்கல் வைப்போம் (பூங்கரும்பு )
Comments