பூங்கரும்பு கட்டிவைத்து புதுப்பானை நடுவில் வைத்து கும்மியிட்டு குலவையிட்டு குதூகலமாய்ப் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா நல்ல தமிழ் மக்களுக்கு நாளும் நன்மை நடக்க வேண்டி தைமாதத் திருநாளில் தரணியெங்கும் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா கைகொடுத்து காப்பாற்றும் கடவுள் எங்கள் கதிரவனாம் கரங்குவித்து நன்றி சொல்ல கட்டாயமாய்ப் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா ஏர் பூணும் காளைகளை எண்ணத்திலே நிறுத்தி வைத்து எல்லாருமே சேர்ந்து இங்கே இனிமையான பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா கன்னியர்தம் கைமணமும் கலையோடு காணவேண்டி காணும் பொங்கல் என்று சொல்லி கலகலன்னு பொங்கல் வைப்போம் (பூங்கரும்பு )
என்று பிறப்பாய் என்றிருந்தேன் இன்று நீ பிறந்தாய்.. என்ன பெயர் அப்பா எனக்கு என்பதாய் வாய் திறந்தாய்... எந்தமிழ் எழுத்தெல்லாம் என்னில் தொடங்கு எனக் கேட்க பண்ணிருந்தும் பாட்டெழுதாப் பாவலன் நிலை எனக்கு... இனிய பெயர் தேடி இரவெல்லாம் தவித்தேன் நான் பகல் முழுதும் உனைப் பார்த்தே பார்வை தொலைத்ததனால்... விழியழகைச் சொல்லிவிட ஒருபெயரும் விரலழகைச் சொல்லிவிட ஒரு பெயரும் முக அழகைச் சொல்லிவிட ஒரு பெயரும்- உன் முழு அழகைச் சொல்லிவிட ஒரு பெயரும் உருமாறி ஒலிமாறி ஒன்றன்பின் ஒன்றாய் உனக்காகக் கால்வலித்துக் காத்திருக்க ஒற்றைப் பெயர் கண்டேனே கண்மணியே உனக்கது பிடிக்குதா சொல்...?
தமிழ் பெயர்களும் ஆங்கில எழுத்துகளும்... குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்டுவது இயல்பான நிகழ்ச்சியே. பிறப்புப் பத்திரம் எடுக்க அப்பெயரை ஆங்கில எழுத்தில் எழுதுவதும் வழக்கமானது கூட. இதில் எனக்குப் புரிபடாத செய்தி ஒன்று உள்ளது. அது, தமிழ்ப் பெயரை ஆங்கில எழுத்தில் எழுதும் போது அப்பெயரை ஆங்கில உச்சரிப்பில் படிப்பதா இல்லை மலாய் உச்சரிப்பில் படிப்பதா என்பதுதான். பெரும்பாலான பெயர்களை மருத்துவமனைகளில் உள்ள மலாய் தாதியர்கள் தவறாக அழைப்பதும்; அது விளங்காமல் நாம் தலை சொறிந்து நிற்பதும் கண்கூடு. இந்த சிக்கலின் பின்னணி என்ன? 50களில் பதிவகங்களில் நாம் நம் பெயரைச் சொல்ல, அதை அங்கிருக்கும் சீனரோ மலாய்க்காரரோதான் பதிவு செய்வர். அப்போது நிறைய பிழைகள் வந்தது இயல்பே. ஆனால் இப்போது? நம்மில் பெரும்பாலோருக்கு மலாய் எழுதப் படிக்கத் தெரியும். நம் அக்கம்பக்கத்து தமிழ்குடும்பங்களிலும் படித்தவர்கள் இருப்பார்கள். நாம் தான் நம் பெயர்ப்பாரங்களைப் பூர்த்தி செய்கிறோம் இருந்தும் அமுதன் என்ற பெயர் AMMUTTHAN என்று எழுதப்படுவது எதனால்? 2M 2T எதற்கு அப்பெயரில் ? அப்படி எழுதப்படும் பெயர்கள் மருத்துவமனையிலோ பள்ளியிலோ ...
Comments