Jun 22, 2007

நிலை ஏது


ரவும் செலவும் உறவுகளில் உண்டு
வருவது வரவு பிரிவது செலவு
வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்தால்
வருத்தம் இங்கே இயல்பு...

உறுதி சொல்லும் உறவுகள்
உடனேவருமென உத்தரவாதம் கிடையாது..
உடைந்திடும் உறவுகள் இதுதானென்று
உணர்ந்திடும் வல்லமை கிடையாது...

உண்மை உறவினை உறுத்தலாய்ப் பார்க்கும்
ஊரார் மனமோ பொருக்காது
உடனே தடைசெய வழியினைத்தேடி
உறங்கிட உறங்கிட நினைக்காது...

தன்னிலும் தவறுகள் இருக்கிறதென்று
தலைதட்டிச் சொல்லியும் கேட்காது
எண்ணிலாத் தவறுகள் இருப்பதாய்ச் சொல்லி
இறுமாப்புச் செயல்பாட்டை நிறுத்தாது

இனிய உறவுகள் இருந்திட நமக்கு
எண்ணிக்கைக் கவலை இருக்காது
இருக்கும் உறவை பிரிக்கும் உலகம்
இருந்திடும் வரையில் நிலை ஏது...?

4 மறுமொழி:

Rodrigo said...

Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Até mais.

CresceNet said...

Gostei muito desse post e seu blog é muito interessante, vou passar por aqui sempre =) Depois dá uma passada lá no meu site, que é sobre o CresceNet, espero que goste. O endereço dele é http://www.provedorcrescenet.com . Um abraço.

Notebooks said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Notebook, I hope you enjoy. The address is http://notebooks-brasil.blogspot.com. A hug.

கிருஷ்ணா said...

தமிழோடு நேசத்தில் பிரேசில் நாட்டு பின்னூட்டங்களா?? ஏதாவது புரியுதா?!