தூரமாய்த் தொலைவாய்...!

துறந்த உறவுகள் தொலைந்து போகட்டும்
தொலைந்த உறவுகள் தூரம் போகட்டும்
தூரம் போனதும் தூர்ந்து போகட்டும்
தூர்ந்து போகுமுன் என் துயரம் போகட்டும்...!
நினைக்கவில்லை நான்...
நினைவில் நிற்பதேன்..?
மறக்க வேண்டும் நான்...
மறதி தொலைந்ததே..!
வருந்தி அழுவதில் வரவு இல்லைதான்
வருடம் கடந்துமென் வாழ்வு தொல்லைதான்
தூரமாய்த் தொலைவாய்
தொலைவாய் உறவே...!
Comments
nimmathi nithiyamillai.
uravugal thodarnthirunthal,
ullangal pirintirukkum.
pirivu athu munvanthathal,
pinaipu ini thevaiyenne.
marathi tolaintu pogathu
maranike seithuvidu.