உனக்கது பிடிக்குதா சொல்...?

என்று பிறப்பாய் என்றிருந்தேன்
இன்று நீ பிறந்தாய்..
என்ன பெயர் அப்பா எனக்கு
என்பதாய் வாய் திறந்தாய்...
எந்தமிழ் எழுத்தெல்லாம்
என்னில் தொடங்கு எனக் கேட்க
பண்ணிருந்தும் பாட்டெழுதாப்
பாவலன் நிலை எனக்கு...
இனிய பெயர் தேடி
இரவெல்லாம் தவித்தேன் நான்
பகல் முழுதும் உனைப் பார்த்தே
பார்வை தொலைத்ததனால்...
விழியழகைச் சொல்லிவிட ஒருபெயரும்
விரலழகைச் சொல்லிவிட ஒரு பெயரும்
முக அழகைச் சொல்லிவிட ஒரு பெயரும்- உன்
முழு அழகைச் சொல்லிவிட ஒரு பெயரும்
உருமாறி ஒலிமாறி ஒன்றன்பின் ஒன்றாய்
உனக்காகக் கால்வலித்துக் காத்திருக்க
ஒற்றைப் பெயர் கண்டேனே கண்மணியே
உனக்கது பிடிக்குதா சொல்...?
Comments
கவிதை அழகு!!!
ஏதாவது மலர் பெயரா?
மலர்தான் ; அது மல்லிகைதான். ஆனால் வன மல்லிகை.
இப்படி கவிதையா சொன்னா பிடிக்காமல் போகுமா?!
கருத்துக்கு நன்றி அன்பரே,
@கட்டிங் கபாலி
இப்படி மிரட்டினா கத்தவே வராது..கவிதை வருமா...?
உம் காதலி பாவம்யா...
*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்
*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்
*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்
மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.
இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!
அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்
அழக்கான கவிதை... பெயரை மட்டும் சொல்லவே இல்லையே??