Posts

Showing posts from August, 2009

செருக்கு

Image
என்ன நீவருந் திக்கவி படிப்பினும் எடுத்தகற் பனைமுன்னோர் சொன்ன தேயலால் நூதன மொன்றிலை; தொன்மைநூல் பலவாகும்! முன்னந் நூலெலாந் தந்தவன் நீழலை முற்றுணர்ந் தனையில்லை உன்னின் மிக்கவர் பலருளர் கல்வியில் உள்ளமே! செருக்கன்றே! ---நீதிநூல்- அகரம் அமுதனதுபக்கம் போய்வந்தேன் ஒருவலம் அங்கே கண்டதிலே அதிர்ந்து அடங்கியது என்மனம் அடடா புதிது என்படைப்பு அதிலே எத்துணைப் புல்லரிப்பு அத்துணைச்செருக்கும் ஒடுங்கியது; ஒருமொழியதனை உணர்த்தியது எதுதான் புதிது இப்பூமிதனில் என்றே அறிவு புகட்டியது சொல்லாதெதுவும் சொல்லவில்லை - நாம் சொல்வதில் எதுவும் புதிதுமில்லை இல்லாதெதையும் எழுதவில்லை - ஏதும் இல்லை என்பதும் அறிவுமில்லை முன்னறிவின்றி முதிர்ச்சி இல்லை - இதை முன்னம் சொன்னவன் மூடன் இல்லை இப்படிச் சொல்லி என்னையுந்தான் கிள்ளிக் கலைத்தது கனவையுந்தான் இனியொரு செருக்கு எனக்குவந்தால் இன்னுயிர் சுருக்கு என் இறைவா!

உறுத்தல் 2

தமிழ் பெயர்களும் ஆங்கில எழுத்துகளும்... குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்டுவது இயல்பான நிகழ்ச்சியே. பிறப்புப் பத்திரம் எடுக்க அப்பெயரை ஆங்கில எழுத்தில் எழுதுவதும் வழக்கமானது கூட. இதில் எனக்குப் புரிபடாத செய்தி ஒன்று உள்ளது. அது, தமிழ்ப் பெயரை ஆங்கில எழுத்தில் எழுதும் போது அப்பெயரை ஆங்கில உச்சரிப்பில் படிப்பதா இல்லை மலாய் உச்சரிப்பில் படிப்பதா என்பதுதான். பெரும்பாலான பெயர்களை மருத்துவமனைகளில் உள்ள மலாய் தாதியர்கள் தவறாக அழைப்பதும்; அது விளங்காமல் நாம் தலை சொறிந்து நிற்பதும் கண்கூடு. இந்த சிக்கலின் பின்னணி என்ன? 50களில் பதிவகங்களில் நாம் நம் பெயரைச் சொல்ல, அதை அங்கிருக்கும் சீனரோ மலாய்க்காரரோதான் பதிவு செய்வர். அப்போது நிறைய பிழைகள் வந்தது இயல்பே. ஆனால் இப்போது? நம்மில் பெரும்பாலோருக்கு மலாய் எழுதப் படிக்கத் தெரியும். நம் அக்கம்பக்கத்து தமிழ்குடும்பங்களிலும் படித்தவர்கள் இருப்பார்கள். நாம் தான் நம் பெயர்ப்பாரங்களைப் பூர்த்தி செய்கிறோம் இருந்தும் அமுதன் என்ற பெயர் AMMUTTHAN என்று எழுதப்படுவது எதனால்? 2M 2T எதற்கு அப்பெயரில் ? அப்படி எழுதப்படும் பெயர்கள் மருத்துவமனையிலோ பள்ளியிலோ