செருக்கு

என்ன நீவருந் திக்கவி படிப்பினும் எடுத்தகற் பனைமுன்னோர் சொன்ன தேயலால் நூதன மொன்றிலை; தொன்மைநூல் பலவாகும்! முன்னந் நூலெலாந் தந்தவன் நீழலை முற்றுணர்ந் தனையில்லை உன்னின் மிக்கவர் பலருளர் கல்வியில் உள்ளமே! செருக்கன்றே! ---நீதிநூல்- அகரம் அமுதனதுபக்கம் போய்வந்தேன் ஒருவலம் அங்கே கண்டதிலே அதிர்ந்து அடங்கியது என்மனம் அடடா புதிது என்படைப்பு அதிலே எத்துணைப் புல்லரிப்பு அத்துணைச்செருக்கும் ஒடுங்கியது; ஒருமொழியதனை உணர்த்தியது எதுதான் புதிது இப்பூமிதனில் என்றே அறிவு புகட்டியது சொல்லாதெதுவும் சொல்லவில்லை - நாம் சொல்வதில் எதுவும் புதிதுமில்லை இல்லாதெதையும் எழுதவில்லை - ஏதும் இல்லை என்பதும் அறிவுமில்லை முன்னறிவின்றி முதிர்ச்சி இல்லை - இதை முன்னம் சொன்னவன் மூடன் இல்லை இப்படிச் சொல்லி என்னையுந்தான் கிள்ளிக் கலைத்தது கனவையுந்தான் இனியொரு செருக்கு எனக்குவந்தால் இன்னுயிர் சுருக்கு என் இறைவா!