மத்தளமா மனிதனில் தமிழன்?
இருபுறமும் அடிவாங்கி எப்போதும் கிடக்கிறான்!
இருக்கணுமா இனியும் தமிழன்?
பொறுத்தே பொங்கியெழ நேரம் பார்க்கிறான்!
சுருங்கிய நிலைமைக்குச் சுட்டலாமோ விரலை
மங்கிய வாழ்க்கைக்கு மடத்தனந்தான்;மறந்தான்
அறுத்தெரிய வேண்டாமோ எச்சில்உமிழ் வாயை
கருத்துக்களின் வாதங்கள் வெறும் கழுத்தறுப்பே..
அவன்வருவான் இவன்வருவான் அதுவெல்லாம்பொய்
அடிவேரை அறுத்தெரிவாய் அலறிடுவான்,மெய்...
உன்வீரம் அத்தனையும் உலகத்திடம் காட்டு
உற்றபெருமை ஓடிவரும் தன்னைத்தானே மீட்டு
சொல்லிவிட்டு வருவதா சுனாமிக்குப் பெருமை- உன்
சொந்தம் தவிக்கும்போதெல்லாம் சுழற்றியடி, அஃது அருமை!
3 மறுமொழி:
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
தங்கள் தளம் மிகவும் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்
முனைவர் இரா குணசீலன் அவர்களே, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த் நன்றி மலர்கள்.
Post a Comment