சிதைந்த மனம்

எழுதிய கவிதையில் பிழைகள் வந்தால்
இருமுறை படித்துத் திருத்தலாம்...
இருக்கும் வாழ்வில் தவறுகள் வந்தால்
எதனைக் கொண்டு திருத்த நான்..?

முள்ளாய்ப் பாதை கிடக்கும்போது
முகையென நினைக்க உருத்துதே
இல்லாப் பொருளின் இலக்கியம்கூட
இந்த வாழ்க்கையில் கசக்குதே...

பயணம் இதுவெனத் தெரியா ஒருவன்
பாதை கண்டிட வழியுண்டோ
காணும் பாதையில் காலடி தொடர்ந்தால்
காணாப் பயணம் கரையுண்டோ...

வகையே தெரியா கேள்விகளால்- நான்
வதங்கி வதங்கி வாடுகிறேன்...
பகையே தெரியா உறவுகளால் - நான்
பாசம் வேண்டி புலம்புகிறேன்...

Comments

Sathis Kumar said…
வணக்கம் விக்கினேசு ஐயா..

அருமையான பதிவுகளை வெளியிட்டு வருகிறீர்கள்.

'மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள்' குழுமத்தில் இணைய தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

http://groups.google.com/group/MalaysianTamilBloggers
ஆதவன் said…
தமிழோடு நேசக்கரம் கோர்க்க கவிதைகளோடு வளம் வரும் தங்கள் வலைப்பதிவைக் கண்டேன். மகிழ்ச்சி.

கவிதையோடு உங்கள் சிந்தனைக் குதிரைக்குக் கடிவாளம் போடுவிடாமல், தமிழ் உலகத்தை நோக்கி வளம்வர விடுங்கள்.

குமுகாயத்தின் அழுக்குகளைக் கவிதைகளால் தூய்மை செய்தவர்கள் வரலாற்றைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வரிசையில் நீங்களும் இணைய என் வாழ்த்துகள்.

உங்களுடைய பெயரை எழுதியுள்ள முறையிலேயே உங்கள் தமிழ் உள்ளத்தை புரிந்துகொண்டேன்.

தமிழ் உள்ளத்தோடு வலைப்பதிவு உலகிற்கு வந்துள்ள நீங்கள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

எமது தமிழுயிர் வலைப்பதிவை ஒருமுறை பார்வையிடவும். தமிழுயிருக்கு நீங்களும் பங்களிக்கலாம்.
ஐயா ஆய்தன் அவர்களே,
தாங்கள் என் பதிவைக் கண்டது மிக்க மகிழ்ச்சி. நான் ஒருமுறை அல்ல பலமுறை உங்கள் பதிவுகளைப் படித்து வருபவன். இன்னும் சொல்லப் போனால் உங்கள் பதிவில் இன்று என்ன புதிது என ஆவல் கொண்டவன். கட்டாயம் இனி தமிழ் முழக்கம் வீரத்தோடு வரும் என் பதிவில். நன்றி.
அழகிய சந்தக்கவிதை அன்பரே! வாழ்த்துகள்.

அகரம்.அமுதா
வணக்கம்,
//எழுதிய கவிதையில் பிழைகள் வந்தால்
இருமுறை படித்துத் திருத்தலாம்...
இருக்கும் வாழ்வில் தவறுகள் வந்தால்
எதனைக் கொண்டு திருத்த நான்..?//

அருமையான வரிகள்....உண்மையான வரிகள்... வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Popular posts from this blog

பொங்கல் வைப்போம்

உனக்கது பிடிக்குதா சொல்...?