நிலை ஏது

வ ரவும் செலவும் உறவுகளில் உண்டு வருவது வரவு பிரிவது செலவு வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்தால் வருத்தம் இங்கே இயல்பு... உறுதி சொல்லும் உறவுகள் உடனேவருமென உத்தரவாதம் கிடையாது.. உடைந்திடும் உறவுகள் இதுதானென்று உணர்ந்திடும் வல்லமை கிடையாது... உண்மை உறவினை உறுத்தலாய்ப் பார்க்கும் ஊரார் மனமோ பொருக்காது உடனே தடைசெய வழியினைத்தேடி உறங்கிட உறங்கிட நினைக்காது... தன்னிலும் தவறுகள் இருக்கிறதென்று தலைதட்டிச் சொல்லியும் கேட்காது எண்ணிலாத் தவறுகள் இருப்பதாய்ச் சொல்லி இறுமாப்புச் செயல்பாட்டை நிறுத்தாது இனிய உறவுகள் இருந்திட நமக்கு எண்ணிக்கைக் கவலை இருக்காது இருக்கும் உறவை பிரிக்கும் உலகம் இருந்திடும் வரையில் நிலை ஏது ...?